» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவுறுத்தல்

வியாழன் 12, ஜூலை 2018 5:40:01 PM (IST)பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக துணிப்பைகள் உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும் என ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவுறுத்தினார்.  

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், சேரக்குளம், இராமனுஜம் புதூர் கிராமத்தில், கிள்ளிக்குளம், வேளாண்மை கல்லூரியின் மூலம் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா இன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி கலந்து கொண்டு, நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், சேரக்குளம், இராமனுஜம் புதூர் கிராமத்தில், கிள்ளிக்குளம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, நாட்டு நல பணித்திட்ட முகாம் இன்று முதல் 18.7.2018 வரை நடைபெறவுள்ளது. இக்கல்லூரியின் மூலம் வரும் ஆண்டில் இக்கிராமத்தை தத்தெடுத்து, இந்த கிராமத்தில் மரம் நடுதல். தூய்மை பணிகள் மற்றும் குளம் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் மத்திய, மாநில அரசின் திட்டங்களை தெரிந்து அவைகளை கிராமப்புற மக்களுக்கு விளக்கி பயன்பெற உதவிட வேண்டும். கல்லூரி மாணவ. மாணவியர்கள் சமுதயாத்திற்கு தமது பங்களிப்பை தந்து கடமையாற்றவே இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகளின் பெரும் பங்களிப்புடன் தாமிரபரணி தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

இராமனுஜம் புதூர் பகுதியில் இரண்டு கிராமங்களில் மரக்கன்று நடுதல், தூய்மை விழிப்பணர்வு பணிகள் உள்ளிட்ட பணிகள் ஒராண்டிற்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளுடன் மாணவ. மாணவிகள் இக்கிராமத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தனிநபர் இல்லக் கழிப்பிட வசதி, பொது கழிப்பிடங்களின் பயன்பாடுகள் குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து அறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அதன் மூலம் இக்கிராமத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் ஜனவரி - 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில், அதற்கான பணிகளை நாம் இப்பொழுதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களாகிய நீங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும். பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக துணிப்பைகள் உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உங்களது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. குறிப்பாக, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான காரணங்களை அறிந்து விவசாயிகளுக்கு தெரிவித்து, அவர்களின் வருவாயை அதிகரிக்க உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டில், நாட்ட நலப்பணித்திட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மாணவ, மாணவியர்களுக்கும், மரம் நடுதல் பணிகளில் சிறப்பாக மேற்கொண்ட 5 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், இராமனுஜபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளியில் கிச்சன் கார்டன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பள்ளி வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து, தூய்மை பணிகளில் ஈடுபடும் பணியாளர்களிடம் வழங்கிட மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இம்முகாமில் கிள்ளிக்குளம், வேளாண்மை கல்லூரியின் முதல்வர் இராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.பாலசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் உதவி பேராசிரியர் (பயிர் வினையியல்) இராஜாபாபு, உதவி பேராசிரியர் (பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் துறை) தே.சோபா, திருவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ்அருள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் சேரகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ்.கணபதி, கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, பள்ளி தலைமையாசிரியை வசந்தி, அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்ணித்திட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticalsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory