» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடத்துனர் இல்லாத பேரூந்துகளால் வருவாய் இழப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 12, ஜூலை 2018 5:27:13 PM (IST)தூத்துக்குடியில் இயக்கப்படும் ஐந்து நடத்துனர் இல்லாத பேரூந்துகள் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுவதாக சிஐடியூ அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
     
தூத்துக்குடியில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நகர பனிமனை முன்பு வைத்து கரூரில் நடத்துனர் இல்லாத பேரூந்து இயக்கத்தை கண்டித்து கேட் கூட்டத்தில் பேசிய போக்குவரத்து தொழிலாளியை சிறையில் அடைத்த கரூர் அரசு போக்குவரத்து கழக கிளைமேலாளர் மற்றும் பசுபதிபாளையம் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி மத்திய சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாநில செயலாளர் ரசல், சிஐடியு உதவி தலைவர் குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
     
தூத்துக்குடியில் இருந்து ஐந்து நடத்துனர் இல்லாத பேரூந்துகள் இயக்கப்படுகிறது .இதில் ஒரு பேரூந்துக்கு நாள்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் உள்ள ஐந்து பேரூந்துகளுக்கும் முப்பதாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது இதன் மூலம் வேலை ஆட்கள் குறைப்பு நடந்துள்ளது. எனவே அரசு இதனை பரிசீலித்து நடத்துனருடன் பேரூந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors

Thoothukudi Business Directory