» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரில் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு திட்டம்: தவணைமுறையில் வைப்புத் தொகைகள்!

வியாழன் 12, ஜூலை 2018 5:11:03 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் குறைவான செலவினத்தில் குடிநீர் இணைப்புகள் பெறும் வகையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பிவோர், குடிநீர் இணைப்பு பெறுவதற்காக மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகள் மற்றும் கட்டணங்களை ஒரே சமயத்தில் செலுத்துவதற்கு பதிலாக எட்டு சம தவணைகளாக திரும்ப செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கான சிறப்பு முகாம்கள் முதல் கட்டமாக கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.

மேலே கண்டுள்ள பகுதிகளில் மேற்படி தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் குடிநீர் இணைப்பு கோரும் வீட்டிற்கான சொத்து வரி ரசீதுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு சுலப தவணை தொகைகள் மூலம் குடிநீர் இணைப்பினை பெற்று பயன்பெறுமாறும் மேலும் இத்திட்டமானது தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Joseph Marketing



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory