» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழா போட்டிகள்

வியாழன் 12, ஜூலை 2018 3:17:54 PM (IST)காமராஜரின் 116ஆவது பிறந்த தின விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தென் தமிழக கல்லூரிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகின்றது.  

பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, மற்றும் பரதநாட்டியப் போட்டியும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் நாட்டுப்புறக்குழு நடனப் போட்டிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றது.  பள்ளிகளுக்கான பரத நாட்டியப் போட்டியில் சுப்பையா வித்யாலய பெண்கள் மேல்நிலைப்பள்ளி க.ரம்யா, முதல் பரிசையும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி பா.ம.விஸ்மிதா, இரண்டாம் இடத்தையும், புனித தோமையார் மேல்நிலைப் பள்ளியின் அ.அஸ்வந்த் கிறிஸ்டோ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  பள்ளிகளுக்கான பரத நாட்டியப் போட்டியில் சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியின் ந.சாய்லட்சுமி, முதல்பரிசையும், விசாகா பள்ளி ந.பத்மலோசினி இரண்டாம் இடத்தையும், சுப்பையா வித்யாலய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அ.சௌமியா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 

கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப் போட்டியில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் ரா.ப்ரீத்திவ் முதல் பரிசையும், தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியின் ச.மணிகண்டன் இரண்டாம் பரிசினையும், காமராஜ் கல்லூரியின் கு.ஆர்த்திஸ்ரீ மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளனர்.  கல்லூரி மாணவர்களுக்கிடையேயான நாட்டுப்புறக்குழு நடனப்போட்டியில் திருச்சிலுவை மனையியல் கல்லூரியின் ர.அஸ்வினி, பா.கௌசல்யா, மு.அகிலாண்ட ஈஸ்வரி, து.வினிஸ்டா மேரி, மு.ராஜசுந்தரி குழுவினர் முதல் பரிசையும், காமராஜ் கல்லூரியின் த.சேமலதா, ச.சகாயமேரி, த.ஷபர்ணா, இ.தஸ்நேவிஸ் ஆக்னஸ் சுஜா, கி.ட்ரிஷா குழுவினர் இரண்டாம் பரிசினையும், புனித மரியன்னைக் கல்லூரியின் ச.மகாலஷ்மி, மு.பிரித்திகா, அ.ரோஸ்லின் மேரி, ச.பிரதிபா, ஜெ.ஜரின் ஜெய ஷீலா குழுவினர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  

13.07.2018அன்று வணிகவியல் துறைத் தலைவர் கு.காசிராஜன் தலைமையில் "பெருந்தலைவரின் பெரும் புகழுக்கு பெரிதும் காரணமாக இருப்பது கடமை உணர்வா அல்லது கருணை உள்ளமா?" என்ற தலைப்பில் பிஷப் கால்டுவெல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் மு.ராஜதுரை, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரியின் இணைப்பேராசிரியர்  ஸ்ரீமதி, பரமக்குடி வழக்கறிஞர் ஏ.ராமமூர்த்தி, நாகர்கோவில் மலர்விழி ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு இன்னிசை பாட்டுமன்றம் நடைபெறவுள்ளது.  16.07.2018 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசுகளை தமிழகஅரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் .கடம்பூர் செ.ராஜூ வழங்கவுள்ளார்.  போட்டிகளை தாவரவியல் துறை தலைவர் ப.செந்தூர்பாண்டி தலைமையில் மா.சிவபாக்கியம், மா.முரளி, ம.லெ.ராஜேஸ்வரி, மு.ராஜேஸ்வரி, பா.பொன்னுத்தாய், ந.அகிலா, ஆ.சுபாஷினி, மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி .ஆ.தேவராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsNalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing


New Shape Tailors

CSC Computer EducationThoothukudi Business Directory