» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ கவிழ்ந்து பள்ளிக் குழந்தைகள் 8பேர் காயம்: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 12, ஜூலை 2018 12:22:05 PM (IST)

தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் லேசான காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் குமார் (27). ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை தனது ஆட்டோவில், ராம் நகரில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளிக்கு, மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றார். எட்டையபுரம் ரோட்டில் 3வது ரயில்வே கேட் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 8 குழந்தைகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபாகம் போலீசார், காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிவேகமாக வந்த ஆட்டோ, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. காயம் அடைந்த மாணவ, மாணவிகள் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

பிராதான சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து இன்று காலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் சமீப காலமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களில் உரிய பாதுகாப்பு நடமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


Joseph Marketing





New Shape Tailors



Thoothukudi Business Directory