» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டை இலை எங்களுக்கு தான்: டிடிவி தினகரன் சொல்கிறார்

வியாழன் 12, ஜூலை 2018 10:27:55 AM (IST)



இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான். தர்மம் வெல்லும் என்று டிடிவி தினகரன் கூறினார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் நடந்த வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான். தர்மம் வெல்லும், என்று கூறிவிட்டு புறப்பட்டார்.அவருடன் சசிகலா புஷ்பா எம்பி, தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சுந்தா்ராஜ், உமா மகேஸ்வாி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

New Shape Tailors

Anbu Communications


Joseph Marketing


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory