» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருதூர் அணைக்குள் இருநுாறு மாடுகள் சிக்கியது : நுாறு மாடுகள் மீட்பு மீதி மாடுகளை தேடும்பணி தீவிரம்

புதன் 11, ஜூலை 2018 8:41:37 PM (IST)மருதூர் அணைக்குள் 200 மாடுகள் சிக்கின. அதில் 100 மாடுகளை மீட்டனர். மீதி மாடுகளை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. 

துாத்துக்குடி மருதூர் அணை தாமிரபரணி நதியின் 7 வது அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு அமலை செடிகளால் நிறைந்து காணப்படுகிறது . நேற்று முன்தினம் கலியாவூர் அருகில் உள்ள உழக்குடியை சேர்ந்த வடிவேல் செல்லையா, அர்சுணன் சுப்பையா, சிதம்பரம், பண்டாரம், சுடலை சிவா என்பவர்களுக்கு  சொந்தமான 200க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்காக அணைக்கட்டுக்குள் சென்றது. இதற்கிடையில் பாசனத்துக்காக தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தண்ணீர் மருதூர் அணையை நிரப்பியது. தண்ணீரை தேக்கி வைத்து இரண்டுநாள் கழித்து மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்காலில் பாசனத்துக்கு  தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.இதற்குள் அணைக்குள் மாடுகள் சிக்கி கொண்டன. பொதுமக்கள் மாட்டை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.  

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ்அருள், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாடுகளை மீட்க சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள்  சந்திரசேகரன் தலைமையில் வந்து சேர்ந்தனர்.அணைக்கட்டில்  தண்ணீர் இருக்கும் போது மீட்பு பணி தடைபட்டது. எனவே தாசில்தார் பொதுப்பணித்துறையினரிடம் பேசி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுத்தார். பொதுப்பணித்துறை பாசன உதவியாளர் கல்யாணி மருதூர் கீழக்காலில் 250 கன அடிதண்ணீரையும் , மருதூர் மேலக்காலில்  150 கனஅடி தண்ணீரையும் , ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு 500 கனஅடி தண்ணீரையும் திறந்து விட்டார். இதனால்  நேற்று முன்தினம் இரவு 7மணிக்கு தண்ணீர் குறைந்தது. ஆனாலும் அமலை செடிகள் அதிகமாக இருந்த காரணத்தினால் மீட்பு பணி தாமதப்பட்டது. ஊர் மக்கள் உதவியோடு தீயணைப்பு படையினர் சுமார் 70 மாடுகளை மீட்டனர். பின் இரவு நேரமான காரணத்தினால் மீட்பு பணி தள்ளி வைக்கப்பட்டது.

மீண்டும் நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் தலைமையில் அதிகாரிகள் கலியாவூருக்கு வந்தனர்.  வல்லநாடு வருவாய் ஆய்வாளர்  மைக்கேல் , கிராம நிர்வாகி அதிகாரி மாரிசங்கர்,  கால்நடை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பிரேமா, ஜோசப் சந்திரன், துணை இயக்குனுர் ஜெயகிறிஷ்டி, பூவாணி டாக்டர் காசிராஜன் உள்பட மருத்துவகுழுவினரும் அங்கு வந்து சேர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை நிலைய அதிகாரி முத்துகுமார் , விஜயகுமார், ரோலன், ராமமூர்த்தி கொண்ட குழுவினர் தாமிரபரணி ஆற்றுக்குள்  இறங்கி தேட ஆரம்பித்னர் இவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர். காலை 11 மணிக்குள் 29 மாடுகள் உயிரோடு மீட்கப்பட்டு விட்டது. 1 காளைமாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மற்ற மாடுகளை மீட்கும் பணி நடந்துவருகிறது. சப்கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

CSC Computer Education

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Thoothukudi Business Directory