» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் : அழகுமுத்துகோனின் பெண்வாரிசு நம்பிக்கை

புதன் 11, ஜூலை 2018 8:13:38 PM (IST)

முன்னாள்முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அர சாணையையும் தற்போதைய முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி நிறைவேற்றித் தருவார் என அழகுமுத்து கோனின் வாரிசு ராணி நம்பிக்கை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கட்டாலங்குளத்தில் வீரர் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில், தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்த நாள் விழா, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதுபோல் திமுக கீதாஜீவன் எம்எல்ஏ.,வும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகுமுத்துகோனின் வாரிசு ராணி, முன்னாள்முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அரசாணை யையும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape TailorsJoseph Marketing


crescentopticals
Thoothukudi Business Directory