» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடிஆட்சியர் எங்கு சென்றார் ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதன் 11, ஜூலை 2018 7:41:58 PM (IST)

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

கடந்த மே மாதம் 22 ம் தேதி துாத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இந்நிலையில்தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடுவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன? துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது? துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.


மக்கள் கருத்து

ஆப்Jul 11, 2018 - 08:12:59 PM | Posted IP 162.1*****

ஒரு பிரயோஜனமும் இல்ல .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors







Thoothukudi Business Directory