» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வைகோ மீது வழக்கு: துாத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

புதன் 11, ஜூலை 2018 6:39:41 PM (IST)

துாத்துக்குடியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ மீது வழக்குப்பதிய துாத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செ யலாளர் வைகோ ஆஜராக கடந்த 6 ம் தேதி துாத்துக்குடி வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளிவந்த வைகோவை தரக்குறைவாக  பேசியதாக வழக்கறிஞர்கள் இருவர் மீது மதிமுகவினர் தாக்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.இவ்வழக்கில் தாக்கப்பட்ட வழக்கறிஞர் பூபாலராயர்புரத்தை சேர்ந்த ஜெகதீஷ்ராம், துாத்துக்குடி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தென்பாகம் போலீஸ் மீது வழக்கு தொடர்ந்தார்.

இதில் தன்னை தாக்கிய வைகோ மற்றும் மதிமுக வினர் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.எனவே தன்னை தாக்கயோர் மீது வழக்கு பதிய உத்தரவிட கேட்டிருந்தார்.வழக்கை விசாரித்த ஜேஎம் 1 நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை வழக்கை விசாரித்து வைகோ மற்றும் மதிமுகவினர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.இந்நிலையில் துாத்துக்குடி மதிமுக செயலாளர் முருகபூபதி வழக்கறிஞர்கள் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Nalam Pasumaiyagam


New Shape Tailors

CSC Computer Education

Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory