» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுகிராமத்தில் பழைமையான மரம் சரிந்து விழுந்தது : மூன்று சைக்கிள்கள், ஒரு பைக் சேதம்

புதன் 11, ஜூலை 2018 6:26:13 PM (IST)துாத்துக்குடி புதுகிராமத்தில் பழைமையான வேப்பமரம் வேருடன் சரிந்து விழுந்தது.

துாத்துக்குடி புதுகிராமம் திருச்செந்துார் ரோட்டில் இன்று 25 ஆண்டுகளுக்கு மேலான வேப்பமரம் வேருடன் சரிந்து விழுந்தது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மரம் சரிந்து விழும் போது புதுக்கிராமத்தை சேர்ந்த அபிமன்யு என்பவர் கார் ஓட்டி வந்தார்.ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களின்றி உயிர் தப்பினார்.

மரத்தின் அருகிலிருந்த ஹிந்தி பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் வேப்பமரத்தின் கீழே தங்கள் சைக்கிள்களை நிறுத்தியிருந்தனர்.மரம் விழுந்ததில் மூன்று சைக்கிள்கள் மற்றும் ஒரு பைக் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவலறிந்த மின்வாரியத்தினர் அப்பகுதியில் மின்இணைப்பை துண்டித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape TailorsJoseph MarketingThoothukudi Business Directory