» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ம.சு. பல்கலையில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல்

புதன் 11, ஜூலை 2018 6:02:16 PM (IST)



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ் கலந்து கொண்டு பேசினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018 – 19 ஆம் கல்வியாண்டில் முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த பட்ட படிப்பிற்கு சேர்க்கை பெற்று பயிலும் மாணவ மாணவியர்களுக்கான மூன்று நாட்கள் கொண்ட அறிமுக மற்றும் பயிற்சி வகுப்பு 09.07.2018 திங்கள்கிழமை முதல் தொடங்கி இன்று 11.07.2018  நிறைவு பெற்றது. இந்நிறைவு விழா நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகையில் விளையாட்டில் மட்டும்தான் வெற்றி தோல்வியை சரிசமமாக பார்ப்பார்கள் என்றும் தன்னைதானே ஊக்க்கப்படுத்தி கொள்வார்கள் என்றும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து  ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்  பிராட் ஹாக்  மாணவ மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.அப்போது பிராட் ஹாக்  பேசுகையில் நான் ஒரு கிராமத்தில் உள்ள ஏழ்மை குடும்பத்தில் பிறந்து பல்வேறு சோதனைகளைக் கடந்து சர்வதேச அளவில் விளையாடினேன். 

அது போல் நீங்களும் சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் தனக்கென ஒரு இலக்குடன் பயணம் செய்து வெற்றி பெற வேண்டும் என பேசினார். முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர் மற்றும் உடற்கல்வியியல் விளையாட்டுத்துறைத் தலைவர் சேது வரவேற்புரையாற்றினார். விழா முடிவில் கல்வியியல்துறைத் தலைவர் பேராசிரியர் வில்லியம் தர்ம ராஜா நிறைவுரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலர், தேர்வாணையர், தொலைதூர தொடர்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மேலும் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள், மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை செய்திருந்தது.       


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


CSC Computer Education


Black Forest Cakes

New Shape Tailors

Anbu Communications

Joseph Marketing



Thoothukudi Business Directory