» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடை ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு சொத்து வரி ரத்து: கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறிவிப்பு

புதன் 11, ஜூலை 2018 5:49:56 PM (IST)

கோவில்பட்டியில்  அரசு புறம்போக்கு ஓடைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு 123 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் க.அச்சையா விடுத்துள்ள செய்திகுறிப்பு: கோவில்பட்டியில் மெயின்ரோடு பகுதிகளில் ஓடைப்பகுதியின் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை மூலம் உரிய சட்ட விதிகளின்படி அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர் நடவடிக்கையாக கோவில்பட்டி வட்டாட்சியரின் கோரிக்கையின்படி கோவில்பட்டி வட்டம் மற்றும் நகரம், செவல்குளம் ஓடை நகரளவை வார்டு சி பகுதியில் நகரளவை எண்கள் 214, 139, 286 மற்றும் 337ல் 4215 சதுர மீட்டர் அரசு புறம்போக்கு ஓடைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு நகராட்சி மூலம் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரிவிதிப்பு எண்களை ரத்து செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகராட்சி வார்டு எண் 4 ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் உள்ள மொத்தம் 123 சொத்துவரி விதிப்பு எண்கள் 1.4.2018 முதல் ரத்து செய்து உத்தரவிடப்பட்டு அதன் விபரத்தை கடிதம் மூலம் வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அனுமதியற்ற கட்டுமானங்கள் எதுவும் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsCSC Computer Education


New Shape TailorsThoothukudi Business Directory