» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டாலங்குளத்தில் ரூ.4.15 கோடியில் புதிய சாலை பணி : அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

புதன் 11, ஜூலை 2018 5:37:10 PM (IST)கட்டாலங்குளத்தில் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கோவில்பட்டி - செட்டிகுறிச்சி புதிய தார்சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் ஆர்ச் அருகில், கோவில்பட்டி முதல் செட்டிகுறிச்சி வரை, புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (11.7.2018) நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு, புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசியதாவது: இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2017 - 2018ம் ஆண்டு நிதியிலிருந்து ரூ.415 இலட்சம் செலவில், கோவில்பட்டி முதல் செட்டிகுறிச்சி வரை 11.35 கி.மீ தூரத்திற்கு, புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. குண்டும், குழியுமான சாலையில், மக்கள் சிரமமப்பட்டு சென்று வந்தனர். இதன் மூலம் மக்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதயில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் உள்ளதால் இச்சாலை விரைவில் இருவழிச்சாலையாக அகலப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சியர் சின்னத்துரை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ராஜூ, முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals

Thoothukudi Business Directory