» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணல் கடத்தல் தகராறில் கொலை: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

புதன் 11, ஜூலை 2018 4:51:55 PM (IST)

நாங்குநேரி அருகே மணல் கடத்தல் தகராறில் நடந்த இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம்,  நாங்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சுப்பையா(23). இவருக்கும் இவரது உறவினர் வாலசுடலைக் கண்ணுவின் மகன் ஆறுமுகம் (23) என்பவருக்கும் இடையே நம்பியாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், மீண்டும் அவர்களுக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. 

இதற்கிடையே, நேற்று வயல்வெளியில் பதுங்கி இருந்த சுப்பையாவை ஆறுமுகமும், அவரது அண்ணன் சுடலைக்கண்ணுவும் சேர்ந்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனராம். பின்னர் இருவரும் தப்பிவிட்டனர். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஆறுமுகம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingNew Shape TailorscrescentopticalsThoothukudi Business Directory