» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வன்முறை : 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

புதன் 11, ஜூலை 2018 8:30:55 AM (IST)

தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், மத்தியபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வன்முறை சம்பவத்தில் கைதாகி பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள சிவத்தையாபுரத்தை சேர்ந்த ஜெயபாண்டி மகன் குருபரணி (36), தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருண் என்ற ராஜா (37) ஆகியோர் மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் வன்முறை சம்பவம் தொடர்பாக வழக்குகள் உள்ளன.

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி முரளிரம்பா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார், குருபரணி, அருண் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று முன்தினம் வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors





crescentopticals

Joseph Marketing



Thoothukudi Business Directory