» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அண்ணன் தற்கொலை: அதிர்ச்சியில் தங்கை மரணம்!!

செவ்வாய் 10, ஜூலை 2018 10:07:39 AM (IST)

கோவில்பட்டியில் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியில் தங்கை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு முத்துப்பாண்டி, திருப்பதி என இரு மகன்களும், மகாலெட்சுமி, கற்பகவல்லி என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில், திருப்பதியை தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. தோணுகால் தலையாரியாக திருப்பதி(37) பணிபுரிந்த நிலையில், சில காரணங்களால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குறுக்குசாலை அருகேயுள்ள அரசரடிகுமாரபுரத்தில் கணவர் ராஜாமித்தரனுடன் வாசித்து வந்த திருப்பதியின் சகோதிரி கற்பகவல்லிக்கு(31) தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகவல்லி தனது கணவருக்கு செல்போனில் பேசிய படி மயக்கிவிழுந்துள்ளார். 

அவரது உறவினர்கள் கற்பகவல்லியை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே கற்பகவல்லி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அண்ணன் இறந்த செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கற்பகவல்லி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பதி அனைவரிடமும் அன்பாகவும், பாசத்துடன் பழகுவர் என்றும் தனது இரு தங்கைகளிடம் எப்போதும் பாசத்துடன் இருப்பார் என்றும் கூறும் உறவினர்கள், இருவரின் இறப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், துயரத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications


Black Forest Cakes

Joseph Marketing

New Shape Tailors


Nalam PasumaiyagamThoothukudi Business Directory