» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை 90 நாளில் முடிக்கத் திட்டம்: அரசு தகவல்
செவ்வாய் 10, ஜூலை 2018 9:02:11 AM (IST)
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை 90 நாள்களுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதன்விளைவாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதற்கிடையே ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆலை மூடப்பட்டதால் பராமரிப்பின்றி உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆலையில் கந்தக அமிலக்குழாயில் கசிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்குச் சென்று குழாயில் ஏற்பட்ட கசிவைத் தடுக்க முடியவில்லை. இவற்றை தொடர்ந்து பராமரிக்காமல் இருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகளோ உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
இதனால் தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்ப உத்தரவிட வேண்டும். பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் இதுதொடர்பான அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். அவர், மேலும் வாதிடுகையில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அமிலங்களை அகற்றுவது, இயந்திரங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 7 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்து, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பான முதற்கட்ட அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 90 நாள்களுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் பணியாளர்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றார்.இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலை
புதன் 20, பிப்ரவரி 2019 7:44:09 PM (IST)

சண்முகநாதன் எம்எல்ஏ.,வுடன் ஸ்டெர்லைட்எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 7:21:33 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதன் 20, பிப்ரவரி 2019 6:45:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 22ம் தேதி அம்மா திட்ட முகாம்
புதன் 20, பிப்ரவரி 2019 5:59:11 PM (IST)

சீர்மரபினர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கோரி்க்கை
புதன் 20, பிப்ரவரி 2019 5:04:18 PM (IST)

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
புதன் 20, பிப்ரவரி 2019 4:11:36 PM (IST)

மக்கள்Jul 10, 2018 - 02:40:54 PM | Posted IP 162.1*****