» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகசபை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

செவ்வாய் 3, ஜூலை 2018 3:52:34 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணைத் தலைவராக  என். வையாபுரி இன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணைத் தலைவர், சு. நடராஜன், 30.06.2018 அன்று பணி நிறைவு பெற்றார். இதையடுத்து வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணைத் தலைவராக என். வையாபுரி,  இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஒரிசாவிலுள்ள பாரதீப் துறைமுகத்தின் துணைத் தலைவராக 09.03.2015 முதல் பணியாற்றி வந்தார். 

என். வையாபுரி, இயந்திர பொறியியல் துறையில் இளங்கலைபட்டமும் மற்றும் வியாபார நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்று, பெல்ஜியத்திலுள்ள ஆண்ட்வெர்ப்  / ப்ளாண்டர்ஸ் துறைமுக பயிற்சி மையத்தில் துறைமுக நிர்வாக துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

1983 ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் துணை போக்குவரத்து மேலாளராக பணியினை துவக்கிய இவர், 2006 ஆம் ஆண்டு மர்ம கோவா துறைமுகத்திற்கு போக்குவரத்து மேலாளராக பதவி உயர்வு பெற்று மீண்டும் சென்னை துறைமுகத்திற்கே போக்குவரத்து மேலாளராக பெறுபேற்றார். 30 ஆண்டுகளுக்கு மேல் பல துறைமுகங்களில் பணியாற்றிய இவர் துறைமுக செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு இந்திய துறைமுகங்களில் முதன்முறையாக மர்மகோவா துறைமுகத்தில் ரேடியோ அதர்வெண் அடையாள அமைப்பின் மூலம் துறைமுக நுழைவு கட்டுபாட்டு முறையை செயல்படுத்தியவர். 2016ஆம் ஆண்டு பாரதீப் துறைமுகத்தில் மேம்படுத்தபட்ட ரேடியோ அதர்வெண் அடையாள அமைப்பின் மூலம் துறைமுக நுழைவு கட்டுபாட்டு முறையை சீர்படுத்தி கூடுதலாக சாலைவழி சரக்குகளை ஈர்க்க செய்தவர்.

2013 ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தினை அதிகபடுத்துவதற்காகவும் சரக்கு கையாளும் செலவை குறைப்பதற்காகவும் அரைநேர கேங்க் அமைப்பை அறிமுகப்படுத்தியவர். இத்திட்டத்தின் மூலம் முக்கியமாக கப்பல் முகவர்கள் சங்கம் மற்றும் ஸ்டிவிடோர் சங்கங்களிடையே பாராட்டுதல்களையும் நன்மதிப்பையும் பெற்றவர் மேற்கூறிய தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம், இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Joseph Marketing

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


New Shape Tailors


CSC Computer EducationThoothukudi Business Directory