» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிலுக்கன்பட்டியில் விவசாயிகள் மீது பொய்வழக்கு : தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கண்டனம்

ஞாயிறு 24, ஜூன் 2018 5:32:50 PM (IST)தனியார் காற்றாலை நிறுவனம் விளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடியில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தலமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய அவர், தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனம் விவசாயிகளின் விளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து வடக்கு சிலுக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள  பொதுமக்கள் போராடி வருகின்றனர். போராடி வரும் பொதுமக்களை  காவல்துறையினர் 30க்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் மீதும் விவசாயிகள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அடக்கு முறை செய்வது மிகவும் கவலைக்குறியது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவது குறித்தும், பொய்யான வழக்குகளை வாபஸ் பெற வழியுறுத்தி தென்மண்டல ஐ.ஜி யை சந்திக்க உள்ளோம். 

மேலும், கச்சநத்தத்தில் நடந்த படுகொலை சமூக விரோதிகளால் அடக்கு முறை செய்யும் நோக்கத்தில் நடைபெற்றுள்ளதாகவும் இதற்கு பின்னனியில் இருக்கும் உண்மை குற்றவாளிகளை கைது செய்து இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals
Joseph MarketingThoothukudi Business Directory