» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவிடி சிக்னல் மேம்பாலபணியை தொடங்க வேண்டும் : சமத்துவமக்கள் கழகம் தீர்மானம்

திங்கள் 18, ஜூன் 2018 7:32:03 PM (IST)


துாத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பால பணிகளை உடனே தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என சமத்துவமக்கள் கழக நிர்வாகிகள் ஆலாேசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

துாத்துக்குடி மாநகர சமத்துவமக்கள் கழக நிர்வாகிகள் ஆலாேசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாநகர அவைத்தலைவர் உதயசூரியன் தலைமைதாங்கினார்.மாநகர பொருளாளர் சந்தனகுமார்,மாநகர துணை செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் அற்புதராஜ்,மாவட்டஅவைத்தலைவர் கண்டிவேல்,ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில்,துாத்துக்குடி துப்பாக்கிசூட்டில் இறந்த 13 பேரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பது,துாத்துக்குடி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டி முன்னாள்முதல்வரும்,இந்தாள்முதல்வரும் வாக்குறுதி அளித்தபடி விவிடிசிக்னல் மேம்பால பணிகளை உடனே தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும்.

துாத்துக்குடி நகரில் அனைத்து வீடுகளிலும் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் முடிவுற்று பல இடங்களில் வீடுகளில் இணைப்புக்கொடுக்கப்படாமல் உள்ளது.மேலும் இந்த இணைப்புகள் தருவைகுளத்தில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளது.எனவே மாநகராட்சியும், மாவட்டநிர்வாகமும் விரைந்து செயல்பட்டு அந்தபணிகளை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory