» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது வழக்குபதியாதது ஏன்: துாத்துக்குடியில் பிருந்தாகாரத் கேள்வி

திங்கள் 18, ஜூன் 2018 6:02:50 PM (IST)


துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது ஏன் வழக்கு பதியவில்லை என துாத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிருந்தாகாரத் கேள்வி எழுப்பினார்.

மா. கம்யூகட்சி தேசிய அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதியுடன் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி கண்டன கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக நான் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். துாத்துக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும்,சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்தேன்.அவர்கள் கூறிய கருத்துகளை துாத்துக்குடி ஆட்சியர்,எஸ்பி,ஐஜி ஆகியோரை சந்தித்து தெரிவித்தோம்.

துாத்துக்குடியில் சகஜநிலை திரும்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்கள். அதற்கு எதிர்மாறாக சீருடை அணியாத போலீசார் நள்ளிரவில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆண்களை கைது செய்வதாக அறிகிறோம். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு யார் உத்தரவிட்டது என்பதை ஐஜியிடம் கேள்வி எழுப்பட்டது. சுடு கொல் என்ற வகையில் சுட்டுகொலை செய்துள்ளனர்.

அதற்காக போலீசார் மீது ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை. இது நியாயமல்ல.அரசு அறிவித்த விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இழக்க செய்கிறது. இறந்த 13 பேர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம், வேலைவாய்ப்பு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.அந்த குடும்பத்தின் குழந்தைகள் பத்தாவது மற்றும் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். அவர்களின் கல்வி முழு பொறுப்பையும் மாவட்ட நிர்வாகம் ஏற்று கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கு ஆவண செய்வதாக மாவட்டஆட்சியர் உறுதி கூறினார்.

வேதாந்தா நிறுவனம் பிஜேபிக்கு அதிகஅளவில் நன்கொடை அளித்துள்ளது. அதற்கு கைமாறாக அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.100 கோடியை சுற்றுப்புற சூழலுக்காக நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் நிறுவனம் ஒதுக்கியது. ஆனால் அந்த தொகைக்கு எந்த வேலையும் நடைபெறவில்லை. அந்த தொகைக்கு வட்டி 45 கோடி. ஆனால் அத்தொகை எப்படி செலவிடப்பட்டது என மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் சீரழிவை அனுமதிக்க மாட்டோம்.கிராமமக்களை சந்திக்கும் போது,தாமிரகழிவுகள் மலை போல் குவிந்து இருப்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுதவாக தெரிவித்தனர். அதை அகற்ற மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சாமிJun 19, 2018 - 09:43:48 AM | Posted IP 162.1*****

இவ என்ன லூசா - நடந்தது எல்லாருக்கும் தெரியும் - வன்முறை வெடித்தது - துப்பாக்கி சூடு நடந்தது - தூண்டி விட்ட இவர்களை காணவில்லை - இதில் பேச்சு வேற பெருசா - எதாவது வாயில வனத்துறை போகுது

ஒருவன்Jun 18, 2018 - 06:49:21 PM | Posted IP 162.1*****

சட்டம் தன கடமையை செய்யும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamAnbu Communications

CSC Computer Education

New Shape Tailors

Joseph MarketingThoothukudi Business Directory