» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை வெளியேற்ற நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

திங்கள் 18, ஜூன் 2018 4:21:15 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஆலையில் பாதுகாப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து நிபுணர்கள் குழு மூலம் கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 

கந்தக அமிலக் கசிவை தடுக்கும் பணி இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிக்கப்படும். மேலும், இந்த கசிவு மேலும் தொடராமல் இருக்க இங்குள்ள கந்தக அமிலத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையில் சுமார் 2000 டன் கந்தக அமிலம் இருக்கலாம். ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை லாரி மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். 

மேலும், ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய, 100 கோடி டெபாசிட் பணத்தில் இதுவரை வட்டித்தொகை மட்டும் 45 கோடி வந்துள்ளது. இதுவரை ரூ.27 கோடி பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. முந்தைய மாவட்ட ஆட்சியர், வளர்ச்சிப்பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த அனுமதி கிடைத்த பின்னர், மீதியுள்ள தொகை செலவிடப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingNew Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory