» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றாலத்தில் கார் விபத்து: தூத்துக்குடி வாலிபர் பலி - பெண் உட்பட 3 பேர் படுகாயம்!!

திங்கள் 18, ஜூன் 2018 10:33:09 AM (IST)குற்றாலத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த வாலி்பர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபு (40) இவரது மனைவி நர்மதா(37) இவரது நண்பர்கள் தூத்துக்குடி மாவட்டம் சிவகளை நடுத்தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் சக்திவேல், மற்றும் ஆறுமுகம் உட்பட 4பேர் நேற்று இரவு ஒரு காரில் தூத்துக்குடியிலிருந்து குற்றாலம் சென்றனர். இந்த காரை சக்திவேல் (30) ஓட்டி வந்துள்ளார். நேற்று இரவு வந்த இவர்கள் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி சிற்றருவி ஆகிய அருவிகளில் குளித்துவிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு பழையகுற்றால அருவிக்கு சென்றுள்ளார்கள். 

அப்போது  பழைய குற்றாலம் செல்லும் வழியில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்ற ஒரு மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டிவந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் உரிமையாளர் பிரபு அவரது மனைவி நர்மதா மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த குற்றாலம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிலையில் காரில் இருந்து 3 பேர்களையும் மீட்டு உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் அவர்கள் 3 பேர்களையும் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியான டிரைவர் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticalsThoothukudi Business Directory