» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இரத்த தான முகாம்

வியாழன் 14, ஜூன் 2018 4:49:39 PM (IST)தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.  

இது தொடர்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "உலக நாடு முழுவதும் ஜீன் 14ம் நாள் உலக இரத்ததான தினமாக  கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக இன்று வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் மருத்துவமனையில் துறைமுக மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். இந்திய கடலோர காவல்ப்படை தலைமை அதிகாரி வெங்கடேஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் எம். மிஸ்ரா, மற்றும் துறை தலைவர்கள் முன்னிலையில் துவக்கி வைதது இரத்ததானமும் செய்தார். 

இம்முகாமினை துவக்கி வைத்து  துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நடராஜன், கூறுகையில் இரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரும் சமுதாய முன்னேற்றத்தில் ஒரு பெரும்பங்கினை வகுக்கின்றனர். மக்கள் சமுதாயத்தை ஒன்று சேர்ப்பதற்கு இரத்ததானம் அவசியமும் ஒரு சிறந்த வழியும் ஆகும். இந்த இரத்தான முகாமில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட துறைமுக ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள், துறைமுக குடியிருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பாராட்டினார். மேலும், இரத்ததானம் செய்த 8 நபர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி டாக்டர் சாந்தி பிச்சுமணி தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி அதிகாரிகள் குழுவினரும், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக துணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜோசப் சுந்தர் மற்றும்  குழுவினரும் இணைந்து இம்முகாமினை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரத்தானம் செய்யும் நபர்களை ஆரம்ப மருத்துவ சோதனையாக இரத்த வகை, ஹிமோகுலோபினின் எண்ணிக்கை,  எடை ஆகியவை சோதித்த பிறகே இரத்தம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட இரத்தமானது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கிற்கு எடுத்து சென்று அவசரமாக தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கபட  உள்ளது. இந்த இரத்ததான முகாமில் 125 பேர் ஆர்வத்தோடு இரத்ததானம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsJoseph Marketing


crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory