» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூரிய எரிசக்தி பூங்காக்கள் திட்டம்: விருப்பக் கருத்துரு அனுப்பலாம்: ஆட்சியர் தகவல்

வியாழன் 14, ஜூன் 2018 3:55:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய எரிசக்தி பூங்காக்கள் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் விருப்பக் கருத்துரு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் 500 மெகாவாட் அளவுக்கு ஒருங்கிணைந்த சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சூரிய எரிசக்தி பூங்காக்கள் 50 மெகாவாட் முதல் அமைக்கப்படும். சில குறிப்பிட்ட நிலைகளில் 50 மெகாவாட்டுக்கும் குறைவான திறன் கொண்ட பூங்காக்கள் அமைக்கவும் பரிசீலிக்கப்படும்.

விவசாயிகள் குழுக்கள் குறிப்பாக சிறு/குறு விவசாயிகள் குழுக்கள், சுயஉதவிக் குழு பெண்கள், ஊராட்சிகள், விவசாய சங்கங்கள் இதற்குத் தேவையான நிலங்களைக் குத்தகைக்கு வழங்கலாம். இவர்கள் தனியாகவோ, இணைந்தோ நிலத்தை வழங்குவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்க வேண்டும். இவ்வாறு சூரிய எரிசக்தி பூங்கா அமைக்க தங்கள் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நிலையான ஆண்டு வருவாயைப் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு சூரிய எரிசக்தி பூங்கா அபிவிருத்தியாளர்களிடம் தங்கள் பங்கைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்த பூங்காக்களின் மூலம், உள்ள+ர் மற்றும் அந்த வட்டாரத்தின் வறுமையை ஒழிக்க, நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பை தரும். எடுத்துக்காட்டாக (i) திறனுள்ள / பகுதி திறன் வாய்ந்த / பயிற்சி பெறாதவர்களுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர பணி வாய்ப்புகள், (ii) தனியார் மற்றும் பொது பொருளாதார முதலீடுகள், (iii) அந்தப் பகுதியின் அடிப்படை கட்டமைப்புகளான சாலை வசதி, சுகாதாரம், மின்சார வசதி, தண்ணீர் வசதி மேம்பாடு, (iv) ஆற்றல் பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் (எ) சமூக வளர்ச்சியை குறிப்பிடலாம்.

இத்திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் இது குறித்த விருப்பக் கருத்துருக்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும், www.teda.in இணையதளத்திலும் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிப் பொறியாளர் அவர்களை அலைபேசி எண்.7708064729 ல் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDJoseph Marketing

Thoothukudi Business Directory