» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4வது யூனிட் பழுது

வியாழன் 14, ஜூன் 2018 11:03:39 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் இயங்காததால் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் உள்ளன. தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்டுகளில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் அவ்வப்போது யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபடுகிறது. 

இந்நிலையில், 4வது யூனிட் மின்மாற்றி பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3வது யூனிட் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 யூனிட்டுகள் இயங்காததால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 1வது, 2வது மற்றும் 5வது யூனிட்கள் இயங்கி வருகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals



New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing



Thoothukudi Business Directory