» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு

வியாழன் 14, ஜூன் 2018 8:27:38 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலரில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி பிரையன்ட்நகர் 4வது தெரு பகுதியில் நேற்று முன் தினம் இரவு ஒரு இளம்பெண் தனது தோழியுடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த நபர் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளார். அந்த பெண்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் அருகில் வந்த அந்த நபர் அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துள்ளார். 

இதில் நிலைகுலைந்த அந்த இளம்பெண்கள் 2 பேரும் டூ வீலர் சரிந்து கீழே விழுந்தனர். இருப்பினும்அந்தப்பெண் செயினை பிடித்துக் கொண்டு, ஹெல்மெட் நபருடன் தொடர்ந்து போராடினார். ஆனால் அந்த செயினின் பெரும்பகுதி ஹெல்மெட் அணிந்த நபரிடம் சிக்கியது. அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்து தப்பியோடி விட்டார். பறிக்கப்பட்ட 3 பவுன் செயினின் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Joseph Marketing

New Shape Tailors

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory