» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் 23ம் தேதி வருஷாபிஷேகம்

வியாழன் 14, ஜூன் 2018 8:20:20 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம்  23ஆம் தேதி ஆனி வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி,  நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அன்றைய தினம்  அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலை 8.30 - 9  மணிக்குள்  வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான்  வள்ளி அம்பாளுடன் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Joseph Marketing


Black Forest Cakes

Anbu Communications




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory