» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வல்லநாட்டில் பழுதடைந்த மின்மாற்றி மாற்றப்படுமா ? : கீதாஜீவன் எம்எல்ஏ., கேள்வி

புதன் 13, ஜூன் 2018 7:36:32 PM (IST)

துாத்துக்குடி வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கென்று அமைக்கப்பட்ட மின்மாற்றி பழுத டைந்துள்ள தாகவும் அதனை உடனே சீரமைக்க வேண்டுமென துாத்துக்குடி தொகுதி எம்எல்ஏ.,கீதாஜீவன் கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் இன்று பேசிய துாத்துக்குடி எம்எல்ஏ.,கீதாஜீவன்,தூத்துக்குடி 4வது பைப்லைன்க்குட்பட்ட பிரத்யேகமாக அதற்கென்று அமைக்கப்பட்ட மின்மாற்றி, வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கென்று அமைக்கப்பட்ட அந்த மின்மாற்றி கடந்த ஒரு மாதகாலமாக பழுதடைந்துள்ளது.  பாளை மின்உபநிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் சரியாக மின் விநியோகம் இல்லாத காரணத்தால் தூத்துக்குடி மாநகரத்திற்கு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. காலதாமதமும் ஏற்படுகிறது.  ஆகவே, மின்துறைஅமைச்சர் தங்கமணி அவசர முக்கியத்துவம் கருதி உடனடியாக புதிய மின்மாற்றி அமைப்பதற்கு முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் வாகைகுளம் பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்த மின்மாற்றியும் ஒரு மாதகாலமாக பழுதடைந்துள்ளது.  வாகைகுளம் பகுதியிலுள்ள மின்மாற்றியை மாற்றி புதிய மின்மாற்றி அமைப்பதற்கு அமைச்சர் தங்கமணி முன்வருவாரா என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ., கீதாஜீவன் கூறிய பகுதிகளில், மின்மாற்றிகளை மாற்றித்தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்.  மேலும், அந்தப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை  உடனடியாக மாற்றித் தருமாறும் கேட்டிருக்கிறார். 

தமிழக அரசு,  குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டுமென்பதற்காக அந்த மின்மாற்றி பழுதடைந்துவிட்டாலும் கூட வேறு ஒன்றிலிருந்து இணைப்பு கொடுப்பதற்கு வழிவகை செய்திருக்கிறது.  மின்பளு குறைவாக இருப்பதால் தடை ஏற்படுகிறது என்று துாத்துக்குடி எம்எல்ஏ.,  தெரிவி த்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட  அந்த 2 மின்மாற்றிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

மக்கள்Jun 14, 2018 - 09:31:56 AM | Posted IP 162.1*****

மின்துறை அமைச்சரின் பதில்: ஸ்டெரிலைட் இயங்காததால் காப்பர் கிடைக்கவில்லை. அதனால் மின்மாற்றி அமைக்க காலதாமதமாகும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals






Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing




Thoothukudi Business Directory