» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்ட கூடாது : கோவில்பட்டி நகராட்சிக்கு வியாபாரிகள் கோரிக்கை

புதன் 13, ஜூன் 2018 5:56:38 PM (IST)



கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்ட கூடாது என நகராட்சி ஆணையர் அச்சையாவிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன்முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், பொதுமக்கள் வந்து செல்லமுடியாத நிலை இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது, மேலும் வியாபரிகள் ஆக்கிரமிப்பு செய்யமால் இருக்க இருபுறமும் கயிறும் அடிக்கப்பட்டது. இதற்கிடையில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளதாகவும், முன்பகுதியில் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பின்பகுதியில் உரிய முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது வியாபாரிகள் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் எடுக்க கூடாது என்றும், எல்லா வியாபாரிகளுக்கும் ஒரே மாதிரி இட ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்வம் தலைமையில் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். 

நகராட்சி அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கையினால் 50க்கும் மேற்பட்ட நடைபாதை சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை நகராட்சியில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் நகராட்சி ஆணையர் அச்சையாவை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். வியாபாரிகள் கோரிக்கைகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




crescentopticals

Joseph Marketing





Thoothukudi Business Directory