» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலுக்கல் பரிசுத்திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

புதன் 13, ஜூன் 2018 12:08:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், குலுக்கல் பரிசுத்திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பரிசுப் போட்டிகள் தடைச் சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடை) சட்டம் 1979 போன்ற மூன்று சட்டங்களின் படி விற்பனையை அதிகரிக்கவும், சட்டத்திற்கு விரோதமான பரிசுத்திட்டங்கள்/லாட்டரித் திட்டங்கள், குலுக்கல் போட்டி நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.  

ஆனால் தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் மேற்படி சட்டங்களுக்கு விரோதமாக தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துகின்றார்கள்.  எனவே நுகர்வோர்கள் பண்டிகை காலங்களில் வணிக நிறுவனங்கள் அவர்களின் லாப நோக்கத்தோடு பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், நுகர்வோர்கள் அவற்றில் பங்கேற்று ஏமாற வேண்டாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Joseph Marketing



crescentopticals



Thoothukudi Business Directory