» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உயிரிழந்த 13பேருக்காக 13 தாசில்தார்கள் நியமனம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திங்கள் 11, ஜூன் 2018 4:33:04 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த 13பேருக்காக 13 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தூத்துக்குடியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்து தற்போது முழுமையாக இயல்புநிலை திரும்பிள்ள நிலையில், இன்று அதிகளவில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த 13பேரின் குடும்பத்திற்கு தேவையான வாரிசு சான்றிதழ் போன்ற அனைத்து உதவிகளையும் நிறைவேற்ற 13 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக அறிக்கை தயார் செய்ப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதிகளவில் காயம் அடைந்த 43பேருக்கு ரூ.5லட்சம் வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண காயம் அடைந்த 74பேரில் 25பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். 

காயம் அடைந்ததால், எந்த வேலையும் செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு சுய தொழில் தொடங்குவது உட்பட அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படும். இது தொடர்பாக என்னை பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். கலவரம் தொடர்பாக இரவு நேரங்களில் போலீசார் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். இதுவரை 6பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இதற்காக அந்நிறுவனம் அபராதத் தொகையாக செலுத்திய ரூ.100கோடி நிதியின் வட்டிப் பணத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் வேலையிழந்தவர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிப் பாதையை நோக்கி மாவட்ட நிர்வாகம் செயல்படத் துவங்கியுள்ளது. தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

nagasubramanian.KJun 11, 2018 - 07:04:26 PM | Posted IP 162.1*****

who is bloddy nonsense,who is given shooting order foolish tahsildhar and shoot the constables , on the shooting spot every officer ,police ,constables every body given punishment dismiss order immediately and hang up punishment including vedanta group sterlite CMD and every employees in tuticorin

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education


New Shape Tailors

Joseph Marketing

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory