» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 10 பேர் கைது..!!

திங்கள் 11, ஜூன் 2018 10:27:45 AM (IST)

துாத்துக்குடியில் கடந்த மே 22ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் தொடர்புள்ளதாக துாத்துக்குடி மற்றும் வெளியூர்களை சார்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடியில் கடந்த மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புள்ளதாக துாத்துக்குடி மற்றும் வெளியூர்களை சார்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரெட்டியார்புரத்தை சார்ந்த மகேஷ், பால்ராஜ், புதியம்புத்தூரை சேர்ந்த பூவலிங்கம், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் சதீஷ், முருகேசன், பனிமய நகரைச் சார்ந்த கிளாட்வின், தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ், முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்த செம்புலிங்கநாடார் என்பவரது மகனும், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளருமான இசக்கிதுரை(55), லூர்தம்மாள்புரத்தை சார்ந்த பிரபாகர், தினேஷ் உட்பட 10 பேரை தனிப்படை போலிசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing
Thoothukudi Business Directory