» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடற்கூறாய்வு : சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

செவ்வாய் 5, ஜூன் 2018 4:48:47 PM (IST)

துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இந்நிலையில் சாட்சியங்கள் அழிக்க நேரிடும் என்பதால் தனியார் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.அதன்படி துப்பாக்கிச் சூடு குறித்து சந்தேகம் நிலவுவதால் 13 பேரில் 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்றும் மீதமுள்ள 7 பேரின் உடல்களுக்கு மறு உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி. ஆஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான மணிராஜ், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், ஜெயராமன், ரஞ்சித்குமார், ஜான்சி ஆகிய 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்யலாம். உடற்கூறாய்வுக்கு விதித்த தடை நீக்கப்படுகிறது. உடற்கூறாய்வுக்கு பின்னர் 6 பேரி்ன் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம். உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 

உடற்கூறாய்வின் போது எடுக்கப்படும் துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எவ்வளவு விரைவில் உடற்கூறு ஆய்வு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் இறந்தோரின் உடல்களை அடையாளம் காண உறவினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். திருவனந்தபுரம், எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்காணிப்பில் உடற்கூறாய்வு செய்யப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


New Shape Tailors




Thoothukudi Business Directory