» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது: பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி

திங்கள் 4, ஜூன் 2018 12:02:36 PM (IST)

இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று துவங்கியதும் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் எழுந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையானது மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை மீறியதற்காக செலுத்தப்பட்ட அபாரதத் தொகை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா, அதன் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது: இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது. அந்த ஆலை இயங்குவதற்கு என்று வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்பொழுது சீல் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் இதுகுறித்து  மீண்டும்,போராட வேண்டாம்.

ஆனால் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு எந்த தடையும் இல்லை.நாட்டிலேயே அதிக அளவாக போராட்டங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் கையில் உருட்டுக் கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் என்ன பொதுமக்களா? சமூக விரோதிகள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு முதல்வர் விரிவாக பதிலளித்தார்.


மக்கள் கருத்து

சாமிJun 4, 2018 - 06:26:48 PM | Posted IP 162.1*****

மிக்க நன்றி இரண்டாம் புரட்சி தலைவா .மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் ஒரே தலைவர் மக்களின் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் .

நிஹாJun 4, 2018 - 06:01:32 PM | Posted IP 162.1*****

இப்படித்தானே நீட் விஷயத்திலும் சொன்னீர்கள்? இன்னும் ஆறு -பன்னிரண்டு மாதங்களில் ஆலை திறந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.

DuraiJun 4, 2018 - 01:24:19 PM | Posted IP 162.1*****

மூடிய ஸ்டெர்லைட்டின் விளம்பரத்தை இந்த நொடி வரை உங்கள் tuty online பக்கத்தில் நீக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது... நீக்கினால் மிக்க மகிழ்ச்சி..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





New Shape Tailors

Joseph Marketing




Thoothukudi Business Directory