» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 1, ஜூன் 2018 12:50:15 PM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து தமிழக அரசு வரும் 6-ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22-ம் தேதி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதையடுத்து, அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலர் என்.முத்து அமுதநாதன், "முறையான அனுமதி பெறாமல் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால் தமிழக தலைமைச் செயலர், உள்துறைச செயலர், காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிப்காட் காவல் ஆய்வாளர் ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்யவும், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மே 30-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தகுமார், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார்.  இந்த 2 வழக்குகளும் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில், எதற்காக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதற்கு தமிழக அரசு வரும் 6-ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors






Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Thoothukudi Business Directory