» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 5பேரின் உடல்கள் ஒப்படைப்பு : ஆட்சியர் பேட்டி

வெள்ளி 1, ஜூன் 2018 10:54:37 AM (IST)



தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 5பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்ப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி  கூறினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரது உடல்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் மற்றும் நச்சுயியல் துறை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையிலான மருத்துவர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கி இன்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. 

இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 5பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவரின் உடல்களை (தமிழரசன், ஸ்னோலின்) பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் முன்வரவில்லை. அவர்களது கோரிக்கை என்னவென்று தெரியவில்லை. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனையில் அனைத்து நடைமுறைகளும் உயர்நீதிமன்ற உத்தரவுபடிதான் நடைபெற்றுள்ளது. 

இதுவரை அரசின் நிவாரணத் தொகை செல்வசேகர், கார்த்திக் ஆகிய 2பேரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மிதமுள்ளவர்களின் நிவாரணத் தொகையை அடக்கத்திற்கு பின்னர் பெற்றுக்கொள்வதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் முழு அளவில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. தூத்துக்குடி மாநகரில் 100 சதவீதம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், 100 சதவீத வருகைப் பதிவாகி உள்ளது என்றார்.  இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், சார் ஆட்சியர் பிரசாந்த், தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் லலிதா ஆகியோர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD








Thoothukudi Business Directory