» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் ஆளுநர் நலம் விசாரிப்பு : வழக்குகளை வாபஸ் பெற ஆளுநரிடம் கோரிக்கை!

செவ்வாய் 29, மே 2018 12:42:35 PM (IST)



தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஆறுதல் கூறினார்.,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆளுநர், போலீஸ் துப்பாக்கீச்சூடு, தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மரணம் அடைந்த சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த செல்வசேகர் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது தாயார், சகோதரிகளுக்கு ஆளுநர் ஆறுதல் கூறினார். இந்த ஆய்வின் போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

மேலும்,தூத்துக்குடி மாசிலமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டிற்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆளுநர் சந்தித்து ஆறுதல் கூறியபோது, அவர்கள், எங்கள் மீது இனி புதிதாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யக்கூடாது. மேலும், அனைத்து வழக்குகளையும் வாபஸ்பெற வேண்டும். கடந்த 2013ம் ஆண்டைப்போல, மூடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து விடக்கூடாது. நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Joseph Marketing




New Shape Tailors



Thoothukudi Business Directory