» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 28 உள்ளூர் விடுமுறை

திங்கள் 21, மே 2018 6:41:32 PM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் மே 28 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத்  திருவிழாவை முன்னிட்டு, திங்கள் அன்று (மே 28) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், அன்றையதினம் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்க ப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது. இந்த விடுப்பு செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என்பதால், ஜூன் 9 ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory