» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் தங்கதேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்!!

ஞாயிறு 20, மே 2018 8:34:15 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு இன்று தங்கதேர் ஓடியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி கிரி பிரகாரத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து கிரி பிரகாரத்தை அறநிலையத்துறை இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பல இடங்கள் பலமிழந்து விட்டதாக அறநிலையத்துறை இன்ஜினியர்கள் அறிக்கை சமர்பித்தனர். இதனால் கோயில் கிரி பிரகார மண்டபம் நவீன தொழில்நுடப்த்தில் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்போது தங்கதேர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கிரி பிரகார மண்டபம் முழுமையாக அகற்றப்ப்பட்ட பிறகும் தங்க தேர் ஓடவில்லை. இதனால் பக்தர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே வைகாசி வசந்த திருவிழா நேற்று துவங்கியது. வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதார அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஆனதும் வசந்த மண்டபத்திலிருந்து தங்கதேரில் சுவாமி எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வர வேண்டும். ஆனால் தங்க தேர் ஓடாமல் இருப்பது குறித்து   இணை ஆணையரின் பாரதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து வசந்த திருவிழாவின் இரண்டாவது நாளிலிருந்து தங்க தேர் ஓடும் என இணை ஆணையர் பாரதி அறிவித்தார். இந்நிலையில் வைகாசி வசந்த திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்றுபகலில் உச்சிகால தீபாராதனை ஆனதும்  சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையோடு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். 

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையோடு வலம் வந்தார். அதன்பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கதேரில் நேற்று இரவு 7.00 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையோடு தங்கதேரில் எழுந்தருளியதும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷத்தோடு தங்க தேர் இழுக்கப்பட்டது. சுமார் 6 மாத காலத்திற்கு பிறகு தங்க தேர் ஓடியது பக்தர்களிடையே மிகுந்த மிகழ்ச்சியை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsJoseph Marketing
Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory