» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை!

ஞாயிறு 20, மே 2018 11:39:22 AM (IST)துாத்துக்குடியில் கார்பைடுகல் முலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. மேலும் மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வை பெறலாம்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் கோடை விடுமுறை காலங்களில் மாம்பழ சீசன் வரும். வருடம் ஒரு முறை மட்டும் சீசன் என்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவதால், இந்த காலத்தில் மாம்பழம் விற்பனை அதிகமாக இருக்கும். துாத்துக்குடியில் முன்பு வைக்கோல் முலம் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களே விற்பனைக்கு வந்தன. ஆனால் தற்போது பெருமளவு கார்பைடு முலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களே அதிக அளவில் உலா வருகின்றன.

துாத்துக்குடியில் உள்ள பழக்கடைகளுக்கு இங்குள்ள 2 பெரும் புள்ளிகளே அதிகளவில் மாம்பழங்களை சப்ளை செய்கின்றனர். மேலும் அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது என வியாபாரிகளிடயே ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சீசன் முடிவதற்குள் விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர். இதுபோன்று ஆங்காங்கே வாகனங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு மலிவு விலையில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இது தெரியாமல் இந்த பழங்களை அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.

உணவு பாதுகாப்பு துறை அலட்சியம்..?


ஆனால் துாத்துக்குடியில் இதையெல்லாம் தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை என்ற ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. துாத்துக்குடியில் முன்பு உணவு பாதுகாப்பு துறை தர கட்டுப்பாட்டு அதிகாரியாக ஜெகதீஸ் சந்திர போஸ் என்பவர் இருக்கும் போது அடிக்கடி ஆய்வு செய்து இது போன்று கார்பைடு மாம்பழங்களை பறிமுதல் செய்தார். தற்போது அந்தத்துறைக்கான அதிகாரி இருக்கிறாரா என்பதே தெரியாத நிலை உள்ளது. என்ன காரணத்தினால் உணவு பாதுகாப்பு துறை இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என பாெது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கார்பைடு மாம்பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அரசு மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும்.

கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும். மக்கள் மாம்பழங்களை சாேதிக்காமல் வாங்கக்கூடாது இவ்வாறு அவர் கூறினார். மக்கள் உயிருக்கே தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பைடு மாம்பழங்களை முற்றிலுமாக ஒழிக்க துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.அரசின் முத்திரை இல்லாமல் விற்பனை


தூத்துக்குடி இறைச்சிக்கடைகளில் திறந்த வெளியில் ஆடு, மாடுகள், பன்றிகளை வெட்டி விற்கின்றனர். அந்த வழியாக செல்லும் அதிகாரிகள் கூட இதனை கண்டு கொள்வதில்லை. பல இடங்களில் அரசின் முத்திரை இல்லாமல் இறந்த ஆட்டு இறைச்சிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மேலும், விற்காத ஆடு, மாடு இறைச்சிகளை ஐஸ் பெட்டிகளில் வைத்து மீண்டும் விற்கப்படுவதால் வாந்தி, பேதி போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இவ்விசயத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மக்கள் கருத்து

muruganமே 21, 2018 - 09:11:43 AM | Posted IP 162.1*****

நல்ல கருத்து

ஒருவன்மே 20, 2018 - 02:18:14 PM | Posted IP 162.1*****

சில வியாபாரிகள் எதனை தடவை மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் ? நினைத்தால் ஸ்டெர்லைட் விட மோசமா இருக்கே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


CSC Computer Education

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory