» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்டமுகாம் : ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 17, மே 2018 6:33:09 PM (IST)

துாத்துக்குடி மாவட்டத்தில் நாளை (18 ம் தேதி) அம்மா திட்டமுகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் முத்தசாமிபுரம் மற்றும் வடக்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மாரமங்கலம் கிராமத்திலும் திருச்செந்தூர் வட்டத்தில் புன்னக்காயல் கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் கொம்மடிக்கோட்டை கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் திட்டங்குளம் கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் மணியக்காரன்பட்டி கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் கீழக்கரந்தை கிராமத்திலும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில்; கீழமுடிமன் கிராமத்திலும் கயத்தார் வட்டத்தில் திருமங்கலக்குறிச்சி கிராமத்திலும் நாளை (18 ம் தேதி,வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 

மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறை வேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals
Joseph Marketing


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory