» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் விநியோகம் ஓரிரு நாளில் சீராகி விடும் : துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்

வியாழன் 17, மே 2018 6:08:24 PM (IST)

வல்லநாட்டில் பழுதாகியுள்ள மின்மாற்றி சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் சீராகும் என துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்திட வல்லநாடு தெப்பம் பகுதியில் அமையப்பெற்றுள்ள உபமின் நிலையத்தில் கடந்த மே 14 ம் தேதி அன்று இரவு ஏற்பட்ட பயங்கர இடி மின்னல் காரணமாக மின்மாற்றியானது பழுதடைந்துள்ளது.  இதனால் மாநகருக்கு வரும் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.  

இதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  மேற்படி பழுதினை சரி செய்யும் பணியானது தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.  ஓரிரு நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுவதுடன் கிடைக்கின்ற குடிநீரை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

thondanமே 17, 2018 - 07:23:29 PM | Posted IP 162.1*****

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்தால் போதுமானது . மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும்பொழுது நிறைய தண்ணீர் விரயமாகிறது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory