» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பதியரை அறையில் பூட்டி நகை பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!!

வியாழன் 17, மே 2018 5:23:14 PM (IST)

புதியம்புத்தூர் அருகே கணவன் - மனைவியை அறையில் பூட்டிவிட்டு, பீராேவில் இருந்த நகை - பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி உஷாராணி, நேற்று முன்தினம் இரவு காளிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், காளிமுத்து குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த அறையின் வெளிக்கதவை பூட்டியுள்ளனர். 

பின்னர் பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகள், ரூ.8ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை விழித்த தம்பதியர் அறையின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்படிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.80ஆயிரம் ஆகும். இதுகுறித்து புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


New Shape Tailors





Thoothukudi Business Directory