» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிவிப்பு

வியாழன் 17, மே 2018 4:03:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 145 கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 127 கோவில்களில் 185 கோவில் பாதுகாப்பு பணியிடம் உள்ளது. தற்போது 40 முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 145 கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளது. 

காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் 62 வயதுக்கு உட்பட்ட தகுதியான முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்திலோ அல்லது முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலோ நேரில் தொடர்பு கொண்டு வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் வழங்கப்படும், இதர படிகள் எதுவும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது என எஸ்பி அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory