» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழன் 17, மே 2018 12:58:41 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.. 

தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியையும், சமூக ஆர்வலருமான பாத்திமா உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தற்போது தொழிற்சாலை இயங்கி வரும் பகுதியில், தனது   தனது 2வது யூனிட்டை  விரிவுபடுத்த  மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கடந்த 01.01.2009 ஆண்டு அனுமதி பெற்றது. 

இதை தொடர்ந்து கடந்த 23.07.2015 மற்றும் 23.06.2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பித்துள்ளது. ஆனால்  ஸ்டெர்லைட் நிறுவனம் தனது 2வது யூனிட்டை அனுமதிபெற்ற இடத்தில் விரிவாக்கம் செய்யாமல், தெற்கு வீர பாண்டியபுரத்தில் துவங்குவதற்காக பணிகளை நடத்தி வருகின்றனர். எனவே 2வது யூனிட்டை தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் தொடங்குவது சட்ட விரோதம், சுற்று சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன் விதிகளுக்கு எதிரானது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்கவில்லை. 

எனவே 2வது யூனிட் தொடங்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கருத்தை கேட்க வேண்டும். எனவே மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு தவறான தகவல் கொடுத்து 2வது யூனிட் தொடங்க அனுமதி வாங்கியது சட்ட விரோதம், அதை ரத்து செய்ய வேண்டும். மேலும் தவறான தகவல் கொடுத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticalsJoseph Marketing
Thoothukudi Business Directory