» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணியாளர் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை: உடன்குடி மக்கள் அவதி - ஆம் ஆத்மி புகார்

வியாழன் 17, மே 2018 12:51:50 PM (IST)

உடன்குடி துணை மின் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வே.குணசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை : உடன்குடி தேர்வு நிலை பேருராட்சி எல்கைக்கு உட்பட்ட வில்லி குடியிருப்பு புதுமனை பண்டாரன் செட்டி விளை, சாதரக்கோன் விளை, பண்டார விளை உட்பட பல பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட அச்சம் ஏற்படும் நிலை உள்ளது. 

உடன்குடி புதுமனை பகுதியில் உள்ள S12 என்ற மின்மாற்றி (Transformer) மற்றும் புதுத்தெரு மசூதி எதிரில் உள்ள S27 என்ற டிரான்ஸ்பார்மரும் வெகு நாட்களாக ஒரு பேஸ் பழுதாகி செயல்படுவதால் நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் டவுன் மற்றும் கிராமப் புறத்திற்கு தனி தனி பீடர்கள் இல்லாது இருப்பதால் கிராமப்புரத்தில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடன்குடி டவுன் பகுதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது இதை தவிர்க்க தனி பீடர் உடன்குடி நகரத்திற்கு அமைத்து மும்முனை மின்சாரம் கொடுக்க பட வேண்டும். மேலும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்ய டவுன் பகுதியில் புதிய மின்மாற்றிகள் உடனே அமைக்க பட வேண்டும்.

மழை காலங்களில் இன்சுலேட்டர் கோப்பைகள் உடைவதால் அடிக்கடி கரண்ட் கட் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாதாந்திர பராமரிப்பு பணிகள் மரம் வெட்டுதல் போன்ற பணிகள் துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், திருச்செந்தூர் மின் துறை அதிகாரி, மற்றும் உடன்குடி தூணை மின் நிலைய அதிகாரிகளிடமும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. உடன்குடி துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவே, மின் ஊழியர்களை உடனடியாக நியமனம் செய்து உடன்குடி மக்களின் மின் குறைகளை சரி செய்ய ஆம் ஆத்மி கட்சி வலயுறுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory