» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டாக்டருக்கு விருது: அமைச்சர் வழங்கினார்

வியாழன் 17, மே 2018 11:53:38 AM (IST)



சென்னையில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் பாணு ராஜசேகரனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வழங்கினார்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில்,  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக பணிபுரிந்த 213 மருத்துவ அலுவலர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சுகாதாரச் செயலளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திட்டக் குழும இயக்குநர் தாரேஸ் அகம்மது வரவேற்புரை ஆற்றினார். 

இதில், பந்தல்குடி ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றி வரும் டாக்டர் பிஜி கணேஷ், மற்றும் சென்னையில் குடும்ப நலத்துறை இயக்குநாக பணியாற்றி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் பாணு ராஜசேகரன் உட்பட 213 பேருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்கினார். விழாவில், மருத்துவத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

நிஹாமே 19, 2018 - 11:39:25 AM | Posted IP 162.1*****

ஹும்....புழுத்துப்போன அரசியல்....

செய்தி வாசிப்பவர்மே 18, 2018 - 09:19:16 PM | Posted IP 162.1*****

கீதா அவர்களே .... ஓ.. அப்படியா ??? பார்த்தாலே தெரியுதே .. ஹா ஹா ..

கீதாமே 17, 2018 - 03:47:35 PM | Posted IP 162.1*****

இந்த டாக்டர் அதிமுக தூத்துக்குடி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மனைவி தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அமைச்சர் சான்றிதழ் கொடுத்தாலும் அதிமுக காரர்களுக்கு தான் கொடுப்பார். போங்கடா போங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors


Joseph Marketing




Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory