» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர் கைது

வியாழன் 17, மே 2018 11:35:22 AM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே வாய்க்காலில் குளித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பிளஸ் 1 மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, அங்குள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நவலெட்சுமி புரத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அங்கிருந்து தப்பியோடி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப் பதிந்து அந்த மாணவரை கைது செய்தனர். மேலும், அவர் மைனர் என்பதால்  அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


New Shape Tailors



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Joseph Marketing



Thoothukudi Business Directory